spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற டிஆர்பி ராஜா! டிவிட்டரில் நெகிழ்ச்சி

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற டிஆர்பி ராஜா! டிவிட்டரில் நெகிழ்ச்சி

-

- Advertisement -

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற டிஆர்பி ராஜா! டிவிட்டரில் நெகிழ்ச்சி

தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் நேற்று விடுவிக்கப்பட்டார்.

அமைச்சரவையில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா இடம் பெறுவார் என ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆளுநர் மாளிகையில் நாளை காலை பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா தனது குடும்பத்துடன், முதலமைச்சர். மு க ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

we-r-hiring

தனக்கு பதவி கிடைத்தது குறித்து டிவிட்டரில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள டி.ஆர்.பி.ராஜா, “என்னை வளர்த்து ஆளாக்கிய நவீன தமிழகத்தின் சிற்பி தலைவர் கலைஞர் அவர்களின் நினைவை போற்றி எங்கள் குடும்பத் தலைவர் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர் ஆருயிர் சகோதர உதயநிதி ஸ்டாலினுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ