spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஎம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி - டிடிவி தினகரன்

எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி – டிடிவி தினகரன்

-

- Advertisement -

 

 

we-r-hiring

அளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு மத்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி விவசாய உற்பத்தியை பெருக்குவதில் முன்னோடியாக திகழ்ந்த விவசாயிகளின் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு மத்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நாடு சுதந்திரமடைந்த பின்பு இந்தியாவில் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்த நிலை மாறி, வேளாண் உற்பத்திப் பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்கிய பெருமை விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களையே சாரும்.

கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிகளுக்காக ஏற்கனவே பத்ம ஸ்ரீ, பத்ம பூசன், பத்ம விபூசண் ஆகிய விருதுகளை பெற்றிருக்கும் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் பாரத ரத்னா விருது கூடுதல் பெருமை சேர்த்துள்ளது. மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணைப்பிரதமரும், சிறந்த நாடாளுமன்றவாதியுமான திரு.எல்.கே.அத்வானி, முன்னாள் பிரதமர்கள் சரண்சிங் மற்றும் நரசிம்மராவ் ஆகிய மூவருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது அவர்கள் ஆற்றிய பணிகளை என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

MUST READ