spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமத்திய சென்னை பகுதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!

மத்திய சென்னை பகுதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!

-

- Advertisement -

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

we-r-hiring

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

நேற்றைய பரப்புரை பயணத்தை துறைமுக நகராம் தூத்துக்குடியில் நேற்று காலை தொடங்கி, சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் நேற்று மாலை நிறைவு செய்தார். சென்னை கிழக்கு மாவட்டம், துறைமுகம் மேற்கு பகுதி, தங்க சாலை தெருவில், மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் களம் காணும் அண்ணன் @Dayanidhi_Maran அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டார். உதயசூரியனுக்கு வருகிற ஒவ்வொரு வாக்கும் சமத்துவத்திற்கான வாக்கு என்று ஆதரவு திரட்டினோம்.

MUST READ