spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு எந்த அசையா சொத்துகளும் இல்லை"

“உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு எந்த அசையா சொத்துகளும் இல்லை”

-

- Advertisement -

“உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு எந்த அசையா சொத்துகளும் இல்லை”

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு எந்த அசையா சொத்துகளும் கிடையாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளை அறங்காவலர் பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு எவ்விதமான அசையா சொத்தும் கிடையாது. அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ள சொத்து முடக்கத்திற்கும், அறக்கட்டளைக்கும் சம்பந்தம் இல்லை. அமலாக்கத்துறையின் டுவிட்டர் பக்கத்தில் வெளிவந்த பதிவு சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்கப்படுகிறது.ரூ.36.3 கோடி மதிப்பிலான சொத்து முடக்கத்திற்கும், எங்கள் அறக்கட்டளைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அமலாக்கத்துறை முடக்கிய ரூ 34 லட்சத்தை தகுந்த ஆவணங்களை கொடுத்து சட்டப்படி மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.அறக்கட்டளையின் வரவு, செலவு கணக்குகளை முறையாக வருமான வரித்துறையிடம் செலுத்தி வருகிறோம். முழுக்க முழுக்க மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக செயல்படுகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகாவின் ரூ.36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது குறிப்பிடதக்கது.

MUST READ