Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தை உலுக்கிய வாச்சாத்தி வழக்கின் பின்னணி...!

தமிழகத்தை உலுக்கிய வாச்சாத்தி வழக்கின் பின்னணி…!

-

 

வாச்சாத்தி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!
File Photo

கடந்த 1992- ஆம் ஆண்டு ஜூன் 20- ஆம் தேதி வாச்சாத்தி மலைக் கிராமத்தில் வனத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தருமபுரி அருகே உள்ள வாச்சாத்தி மலைக் கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கியதாகக் கூறி சோதனை நடைபெற்றது.

மிலாது நபியையொட்டி, 3,000 கிலோ மட்டன் பிரியாணி தயாரிப்பு!

இந்த சோதனையின் போது, வாச்சாத்தி கிராம பெண்கள் 18 பேரை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில் கடந்த 1995- ஆம் ஆண்டு 269 பேர் மீது வழக்குப்பதிவுச் செய்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

கடந்த 2011- ஆம் ஆண்டு வழக்கில் 215 பேர் குற்றவாளிகள் என தருமபுரி முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவாளிகளுக்கு 2 முதல் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக 17 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் என நீதிபதி அறிவித்தார்.

மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா அக்டோபர் 15- ஆம் தேதி தொடங்குகிறது!

வழக்கில் தொடர்புடைய 54 பேர் காலமான நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன் வாச்சாத்தி கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வும் செய்திருந்தார்.

MUST READ