Homeசெய்திகள்தமிழ்நாடுவேன்- லாரி மோதி விபத்து- 3 பேர் படுகாயம்!

வேன்- லாரி மோதி விபத்து- 3 பேர் படுகாயம்!

-

 

வேன்- லாரி மோதி விபத்து- 3 பேர் படுகாயம்!

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் பால் ஏற்றிக் கொண்டு சென்ற வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

பேருந்தில் டீசல் திருடிய 3 பேர் கைது!

விராலிமலையில் சென்னை – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், ஒருசில இடங்களில் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. ஒரு வழிப்பாதையிலேயே அனைத்து வாகனங்களும் செல்ல வேண்டி இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில், இந்த விபத்து நேரிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் 2024- தமிழகத்தில் 950 பேர் போட்டி!

விபத்தில் படுகாயமடைந்த பால் வேன் ஓட்டுநர் குமார், லாரி ஓட்டுநர் உட்பட 3 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து காரணமாக, அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ