
அ.தி.மு.க. பிரமுகர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த தீவிர ரசிகர்… நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா…
இது குறித்து தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமிவின் மகன் வெற்றி துரைசாமி உயிரிழந்து, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது குறித்த செய்தியைப் பார்த்து அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன்.
வெறித்தனமாக தயாராகும் சிவகார்த்திகேயன்… டைட்டில் டீசர் அறிவிப்பு…
எந்தவொரு தந்தையும் எதிர்கொள்ளக் கூடாத, எதிர்கொள்ள இயலாத துயரம் இது. உயிருக்கு உயிரான மகனை இழந்து தவிக்கும் சகோதரர் சைதை துரைசாமிக்கு இத்துயர்மிகு நேரத்தில் எனது இதயபூர்வமான ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.