தவெக நிர்வாகிகளிடம் நடந்த விசாரணையை தொடர்ந்து விஜயிடம் சிபிஐ விசாரணை நடத்த உள்ளது. அதற்காக த.வெ.க. தலைவர் விஜயிடம், ஜனவரி 12ம் தேதி சிபிஐ முன் ஆஜராக உள்ளார்.
கரூரில் செப்டம்பா் 27-ம் தேதி நடைபெற்ற விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக விஜயிடம் சிபிஐ விசாரணை நடத்தப்பட உள்ளது. ஏற்கெனவே டிசம்பா் 29,30,31 ஆகிய தேதிகளில் தவெக நிா்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அா்ஜீனா, நிா்மல் குமாாி ஆகியோாிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. தவெக தலைவா்களிடம் நடந்த விசாரணையைத் தொடா்ந்து விஜயிடம் சிபிஐ விசாரணை நடத்த உள்ளது. த.வெ.க. தலைவர் விஜய், ஜனவரி 12ம் தேதி சிபிஐ முன் ஆஜராக உள்ளார். டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் விசாரணைக்கு ஆஜராக ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராக விஜய் ஜனவரி 11ம் தேதி டெல்லி செல்கிறார்.
மேலும், சம்பவம் நிகழ்ந்த கரூா் வேலுசாமிபுரத்தில் உள்துறை அதிகாாிகள் ஆய்வு மேற்கொண்டனா். வேலுச்சாமிபுரத்தில் மத்திய தடயவியல் துறை அதிகாாிகள் சாலையை அளவீடு செய்து ஆய்வு மேற்கொண்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை



