spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவிஜயகாந்திற்கு கொரோனா- மருத்துவமனையில் காவல்துறையினர் குவிப்பு!

விஜயகாந்திற்கு கொரோனா- மருத்துவமனையில் காவல்துறையினர் குவிப்பு!

-

- Advertisement -

 

விஜயகாந்திற்கு கொரோனா- மருத்துவமனையில் காவல்துறையினர் குவிப்பு!

we-r-hiring

சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜயகாந்துக்கு கொரோனா தொற்று…. தேமுதிக நிர்வாகம் அறிவிப்பு!

இது குறித்து தே.மு.தி.க. தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சைக் கொடுக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘அந்த படங்களில் நடிக்கவே மாட்டேன்’…. நடிகர் சிவகார்த்திகேயன்!

இந்த நிலையில், விஜயகாந்தின் உடல்நிலைக் குறித்து அறிய அவரது ரசிகர்கள், கட்சியின் தொண்டர்கள் குவியலாம் என்பதால் மருத்துவமனை முன்பு அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், விஜயகாந்தின் உடல்நிலைக் குறித்து இன்னும் சற்று நேரத்தில் மருத்துவ அறிக்கை வெளியாகவுள்ளது.

MUST READ