
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

“நல்ல பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை மாநிலக் கல்லூரில் இன்று (நவ .27) காலை 11.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி வளாகத்தில் ரூபாய் 52 மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் திருவுருவச் சிலையை தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பின்னர், சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உத்தர பிரதேச மாநில முன்னாள் அமைச்சர் அகிலேஷ் யாதவ், முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் மனைவி சீதா குமாரி, மகன்கள் அஜயா சிங், அபய் சிங் மற்றும் தமிழக அமைச்சர்கள் பொன்முடி, சாமிநாதன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதைச் செலுத்தினர்.
“அரசு மருத்துவமனைகளில் கவனக்குறைவு”- அண்ணாமலை குற்றச்சாட்டு!
வி.பி.சிங் பிரதமராக இருந்த போது, காவிரி நதிநீர் பிரச்னைக்கு தீர்ப்பாயம் அமைத்துத் தந்தார். பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு அரசுப் பணிகளில் 27% இடஒதுக்கீடு பரிந்துரையைச் செயல்படுத்தியவர் வி.பி.சிங். சமத்துவம் என்பது அதிகார பணவீக்கம் என்ற வி.பி.சிங் கருத்துகள் சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.