spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்"நல்ல பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“நல்ல பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

- Advertisement -

 

"நல்ல பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: DMK

தொகுதி மக்களிடம் நல்ல பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. தி.மு.க.வின் நிர்வாக ரீதியிலாக 72 மாவட்டச் செயலாளர்கள் உள்ள நிலையில், சேலத்தில் நடைபெறவுள்ள தி.மு.க.வின் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு மற்றும் வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள் மற்றும் முகவர்களின் பணிக் குறித்தும், இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞரணி மாநில மாநாட்டிற்கு வருகைத் தரவுள்ள தி.மு.க.வின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஒருங்கிணைப்பது, அவர்களுக்கான ஏற்பாடுகளைச் செய்வது, நிகழ்ச்சிகளை உறுதிச் செய்வது உள்ளிட்டவைத் தொடர்பாக விரிவான ஆலோசனை நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.

“இந்தியா முழு தைரியத்துடன் பயங்கரவாதத்தை ஒழித்து வருகிறது”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

அதன் தொடர்ச்சியாக, வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கான பணிகள் குறித்தும், மாவட்டச் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு எந்த தொகுதிக்கும் இதுவரை வேட்பாளர்கள் இறுதிச் செய்யப்படவில்லை என்றும், தொகுதியில் நல்ல பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும்” எனவும் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ