spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்"அரசு மருத்துவமனைகளில் கவனக்குறைவு"- அண்ணாமலை குற்றச்சாட்டு!

“அரசு மருத்துவமனைகளில் கவனக்குறைவு”- அண்ணாமலை குற்றச்சாட்டு!

-

- Advertisement -

 

"தமிழகத்தில் கள்ளச்சாராய ஆறு ஓடுகிறது"- அண்ணாமலை பேட்டி!
Photo: Annamalai Twitter Page

ஏழை, எளிய மக்களின் உயிர் காக்கும் அரசு மருத்துவமனைகள் கவனக்குறைவாக நடத்தப்படுவதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

we-r-hiring

தியாகராய நகர், கிண்டி, தேனாம்பேட்டை உள்ளிட்டப் பகுதிகளில் கனமழை!

இது குறித்து பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில், வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர், அரை மணி நேரத்திற்கும் மேல் மின்வெட்டு காரணமாக மரணமடைந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

தி.மு.க. ஆட்சியில், ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைகள், எத்தனை துச்சமாக நடத்தப்படுகின்றன என்பதை இந்தத் துயரச் சம்பவம் மீண்டும் உணர்த்தியிருக்கிறது. அரசு மருத்துவமனைகள் இத்தகைய அவல நிலையில் இருக்கும்போது, தமிழக மருத்துவக் கட்டமைப்பை ஐரோப்பிய நாடுகளுடன் தான் ஒப்பிட வேண்டும் என்று வெட்கமே இல்லாமல் கூறிக்கொள்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஊழல் செய்து சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை என்றால், தனியார் மருத்துவமனையில் உயர்தர சிகிச்சைதான் வழங்க வேண்டும் என்று ஓடோடிச் செல்லும் தி.மு.க. அரசு மற்றும் அமைச்சர்கள், ஏழை எளிய மக்களின் உயிர் காக்கும் அரசு மருத்துவமனைகளை, இத்தனை கவனக்குறைவாக நடத்துவதற்கு தமிழக பா.ஜ.க. சார்பாக வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்கம், வெள்ளி விலை உச்சத்தைத் தொட்டது!

இந்தத் துயர சம்பவத்தில் பலியான சகோதரி குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க, தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்

MUST READ