சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு இன்று மாலை 6 மணி அளவில் வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை கர்நாடக அணைகளில் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடிக்கு மேலாக திறக்கப்பட்டு வருகிறது.
இதனால் தமிழக – கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு 30,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 45,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து 27-வது நாளாக அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று மாலை 6 மணி அளவில் நீர் திறப்பு வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடியிலிருந்து, 35 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் அனல்மின் நிலையம் வாயிலாக 21,500 கனஅடி நீரும், எஞ்சிய நீர் 16 கண் மதகு வாயிலாகவும் திறக்கப்பட்டு வருகிறது.