Homeசெய்திகள்தமிழ்நாடுமேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு..

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு..

-

மேட்டூர் அணை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவையடுத்து, சேலம் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் இந்தாண்டு அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிட முடியாத சூழல் ஏற்பட்டது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வந்தது.

dam

கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கன அடிக்கும் மேல் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், மேட்டூர் அணைக்கான நீர் வரத்து மாலை 4 மணி நிலவரப்படி 1.51 லட்சம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 110.76 ஆகவும், அணையின் நீர் இருப்பு 79.493 டிஎம்சியாகவும் உள்ளது.

இந்நிலையில் தற்போது முதலமைச்சரின் உத்தரவின் பேரில் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. முன்னதாக நீர் திறப்பு குறித்து டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து முதல்கட்டமாக மேட்டூர் அணையிலிருந்து 12,000 கன அடி நீரை அமைச்சர் கே.என்.நேரு மலர்த்தூவி திறந்து வைத்தார். தொடர்ந்து நீர் வரத்தைப்பொறுத்தி நீர் திறப்பு படிப்படியாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ