Homeசெய்திகள்தமிழ்நாடு"தவெக கூட்டணியில் நாங்கள் இல்லை!" – அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் திட்டவட்டம்!

“தவெக கூட்டணியில் நாங்கள் இல்லை!” – அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் திட்டவட்டம்!

-

- Advertisement -

தவெக அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம்; கூட்டணி கூட்டத்திலும் பங்கேற்க போவதில்லை எனப் பேட்டி"தவெக கூட்டணியில் நாங்கள் இல்லை!" – அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் திட்டவட்டம்!

தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்தவிதமான கூட்டணியிலும் இல்லை என்றும், அக்கட்சியின் கூட்டங்களில் தாங்கள் பங்கேற்கப்போவதில்லை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.  கூட்டணி விவகாரங்கள் மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்துச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கே.பாலகிருஷ்ணன், இது தொடர்பாகக் கட்சியின் நிலையைத் தெளிவுபடுத்தினார்.

we-r-hiring

“நாங்கள் அந்த கூட்டணியில் இல்லை”
செய்தியாளர்கள் சந்திப்பில் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது, “தமிழக வெற்றிக் கழகத்துடன் நாங்கள் கூட்டணியில் இல்லை என்பதைத் தெளிவாகக் கூறிக்கொள்கிறோம். அதேபோல், தவெக அமைக்கும் அமைச்சரவையிலும் நாங்கள் பங்கேற்க மாட்டோம்.

நாங்கள் அந்தக் கூட்டணியில் இல்லாத காரணத்தால், அவர்களது கூட்டணி தொடர்பாக நடைபெறும் எந்தவொரு ஆலோசனைக் கூட்டத்திற்கும் நாங்கள் செல்லப்போவதில்லை. இது குறித்து ஏற்கனவே நாங்கள் தெளிவான முடிவை எடுத்து, அதனை வெளிப்படையாகவும் தெரிவித்துவிட்டோம்” என்று அவர் கூறினார். அரசியல் களத்தில் பல்வேறு கூட்டணிக் கணக்குகள் விவாதிக்கப்பட்டு வரும் சூழலில், தவெக உடனான கூட்டணி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரின் இந்தத் திட்டவட்டமான அறிவிப்பு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எல்லாவற்றையும் மக்களே பார்க்க அரசாங்கம் எதற்கு?” – முதலமைச்சர் விஜயின் உரையை சாடிய கனிமொழி எம்.பி.!

MUST READ