spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகாலடி மட்டுமே தெரிந்த எடப்பாடிக்கு கீழடி பற்றி என்ன தெரியும்… திண்டுக்கல் லியோனி பரிகாசம்

காலடி மட்டுமே தெரிந்த எடப்பாடிக்கு கீழடி பற்றி என்ன தெரியும்… திண்டுக்கல் லியோனி பரிகாசம்

-

- Advertisement -

கீழடியை பற்றி எல்லாம் எடப்பாடிக்கு தெரியாது, அவருக்கு தெரிந்ததெல்லாம் காலடி மட்டுமே என திமுக நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி விமர்சனம்.காலடி மட்டுமே தெரிந்த எடப்பாடிக்கு கீழடி பற்றி என்ன தெரியும்… திண்டுக்கல் லியோனி பரிகாசம்மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் திமுகவின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் , மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் லியோனி, ” சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முன்பே வைகையில் தமிழ் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் உள்ள கீழடியில்  ,  3000 ஆண்டுகளுக்கு முன்பு கீழடியில் தோண்டி எடுக்கப்பட்ட பானையில் தமிழ் எழுத்துக்கள் உள்ளதை அறிந்தோம். மேலும் அங்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பை பயன்படுத்துவதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.

கீழடி அகழாய்வு குறித்து அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் என்பவர் சமர்ப்பிக்கிறார், அவரை உடனே இடமாற்றி தமிழர்களுடைய நாகரீகம் வெளியே தெரியக்கூடாது என ஒன்றிய அரசு செயல்பட்டதை கேட்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி முன் வரவில்லை, துப்பு இல்லை, அவருக்கு தெரிந்தது எல்லாம் கீழடி கிடையாது, காலடி மட்டுமே. காலடி மட்டுமே தெரிந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு கீழடி பற்றி என்ன தெரியும் என அவர் பேசியுள்ளாா்.

மனைவி பிரிந்த சோகத்தால் எஸ்.பி அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த கார் ஓட்டுநர்!

we-r-hiring

MUST READ