- Advertisement -
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காடுகளை விட்டு வெளியே வந்த நான்கு காட்டு யானைகள் சீரியம்பட்டி கிராமத்திலுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்ததால் கிராம மக்கள் அச்சமடைந்தனர்.
சீரியம்பட்டி கிராமத்தில் புகுந்த நான்கு காட்டு யானைகளும் தற்போது ஈச்சம்பள்ளம் காட்டுக்குள் புகுந்திருக்கிறது.
யானைகள் வனப்பகுதியிலிருந்து மீண்டும விளைநிலங்களில் புகுந்துவிடாமல் இருக்க கண்காணிக்கும் பணிகளில் வனத்துறை அதிகாரிகள் 20 க்கும் மேற்பட்டோர் ஈச்சம்பள்ளம் பகுதியில் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.