spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகால்வாயில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய தமிழக ராணுவ வீரர்!

கால்வாயில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய தமிழக ராணுவ வீரர்!

-

- Advertisement -

 

கால்வாயில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய தமிழக ராணுவ வீரர்!
Photo: Indian Army

கால்வாயில் விழுந்த மாணவியின் உயிரைக் காப்பாற்றிய தமிழக ராணுவ வீரர் நவநீதகிருஷ்ணனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

we-r-hiring

ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது!

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தமிழகத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் ராணுவ மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஜூன் 16- ஆம் தேதி அன்று பாட்டியாலாவில் இருந்து சங்க்ரூருக்கு சென்றுக் கொண்டிருந்த போது, பக்ரா கால்வாயில் ஒரு பெண் தவறி விழுந்து, மூழ்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.

அப்போது, தனது உயிரையும் பொருட்படுத்தாமல், துணிச்சலாக கால்வாயில் குதித்து நீரில் மூழ்கிய பெண்ணை நவநீதிகிருஷ்ணன் காப்பற்றியுள்ளார். இவரின் தன்னலமற்ற செயலை ராணுவ தலைமை தளபதி நேரில் அழைத்துப் பாராட்டினார். பொதுமக்களும் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

எல்லைத் தாண்டியதாக 21 தமிழக மீனவர்கள் கைது!

அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “இன்னல் நேரும் தருணத்தில் தன்னுயிர் பாராமல் பஞ்சாப் மாணவியின் உயிரைக் காப்பாற்றிய இராணுவ வீரர் நவநீதகிருஷ்ணனை வாழ்த்துகிறேன்! பாராட்டுகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ