spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுரவுடி வரிச்சியூர் செல்வம் கைது!

ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது!

-

- Advertisement -

 

ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது!
File Photo

மதுரையைச் சேர்ந்த ரவுடி வரிச்சியூர் செல்வதை காவல்துறை கைது செய்துள்ளது.

we-r-hiring

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

மதுரை மாவட்டம், வரிச்சியூரைச் சேர்ந்தவர் செல்வம். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை, ஆட்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கும், இவரது கூட்டாளியான செந்திலுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால், செந்தில் வரிச்சியூர் செல்வத்திடம் பிரிந்து குடும்பத்துடன் விருதுநகர் மாவட்டத்தில் குடியேறினார். இந்த நிலையில், வரிச்சியூர் செல்வம் அழைப்பதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு, கடந்த 2021- ஆம் ஆண்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக, அருப்புக்கோட்டை காவல்துறையினரிடம் செந்திலின் மனைவி, தனது கணவரை காணவில்லை என்று புகார் அளித்திருந்தார். இதனிடையே அவரை மர்மநபர்கள் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

அமலாக்கத்துறைக் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

இந்த வழக்கு தொடர்பாக, வரிச்சியூர் செல்வம் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், விருதுநகரில் அவரை இன்று கைது செய்தனர். பின்னர், அவரை சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

MUST READ