- Advertisement -
500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான பணி தொடக்கம்
தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான, கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்ததை நடைமுறைப்படுத்தும் விதமாக 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான, கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. 50 மீட்டர்களுக்குள் இருக்கக்கூடிய கடைகள், வருவாய் குறைவாக உள்ள கடைகள் உள்ளிட்ட காரணிகள் அடிப்படையில், கடைகள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. எந்தெந்த கடைகளை மூடுவது என்பது குறித்த கணக்கெடுப்பு பணிகளை அதிகாரிகள் தொடங்கினர்.
அதன்படி பள்ளிகள், கோயில்களுக்கு அருகே உள்ள கடைகள் போன்றவற்றை கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. ஆய்வுகளின் முடிவில் 500 கடைகள் இறுதி செய்யப்பட்டு மூடப்படும் என தெரிகிறது.