நெல்லையில் ஆன்லைன் ரம்மியில் ரூ.15 லட்சம் பணத்தை இழந்த சிவன் ராஜ் என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


நெல்லை மாவட்டம் பணகுடி அருகே சிவன் ராஜ் என்பவர் வாடகை கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஆன்லைன் ரம்மி மூலமாக சீட்டு விளையாடும் பழக்கத்தை கொண்டுள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாடி கடந்த ஒரு வருட காலத்திற்குள் சுமார் 15 லட்ச ரூபாய் இழந்துள்ளார். நேற்று இரவு ஒரு லட்ச ரூபாய் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்துள்ளார்.இந்த விரத்தியால் நேற்று இரவு விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார். இவர் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை பெயர் பாஸ்கர் விவசாய தொழில் செய்து வருகிறார்.
மேலும் தந்தையிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனிடைய இவருக்கு சொந்தமான இடம் ஒன்றை விற்று அதில் கிடைத்த 5 லட்சம் ரூபாய் பணத்தை வைத்து விளையாடி ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து இருக்கிறார். நேற்று முன்தினம் சித்தப்பா மகனின் மனைவியின் செயினை அடகு வைத்து அதில் கிடைத்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தையும் சூதாட்டத்தில் இழந்திருக்கிறார். இதனால் ஏற்பட்ட விரக்தி காரணமாக உயிரை மாய்த்துக்கொண்டார்.
