
மண்ணூர் பகுதியில் சாலையில் நடந்துச் சென்ற இளைஞரை மிரட்டி கூகுள் பே மூலம் பணம் பறித்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உரிமைத்தொகை விண்ணப்ப முகாம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் மண்ணூர் பகுதியில் வசிக்கும் ராம்கீ, இரவுப் பணியை முடித்துவிட்டு அவர் வீடு திரும்புகையில், அவரை நான்கு பேர் வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் பணம் தர மறுத்ததை அடுத்து, ஆத்திரமடைந்த கும்பல் சரமாரியாகத் தாக்கி கூகுள் பே மூலம் ரூபாய் 20,000 பணத்தை தங்கள் எண்ணிற்கு அனுப்பிக் கொண்டனர்.
இதையடுத்து, ராம்கீ கொடுத்த புகாரில், காவல்துறையினர் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வுச் செய்து திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.