பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


அண்ணாமலையின் பாதுகாப்பை Y பிரிவில் இருந்து Z பிரிவாக உயர்த்தி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மாவோயிஸ்ட் மற்றும் மதவாத அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அண்ணாமலைக்கு பாதுகாப்பை உயர்த்த மத்திய அரசு முன்வந்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் அதி உச்ச பாதுகாப்பை பெற்ற முதல் எதிர்கட்சி தலைவர் எனும் ஸ்தானத்தை அண்ணாமலை அடைவார்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, தமிழக பாஜக தலைவராக கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி பணியமர்த்தப்பட்டார். இவர் கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் என்ற சிற்றூரை அடுத்த தொட்டம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர். இவர் அகிலா சுவாமிநாதன் என்பவரைத் திருமணம் செய்துக் கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.அண்ணாமலை கர்நாடக காவல்துறை அதிகாரியாக சிறப்பாக பணியாற்றியதற்காக அறியப்படுகிறார். மேலும் “கர்நாடக சிங்கம்” என்றும் அழைக்கப்படுகிறார்.
