Homeசெய்திகள்சென்னை எழும்பூரில் நவம்பர் 4 ஆம் தேதி முதல் 16 ம் தேதி வரை ...

சென்னை எழும்பூரில் நவம்பர் 4 ஆம் தேதி முதல் 16 ம் தேதி வரை 14 வது ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது .

-

சென்னை எழும்பூரில் நவம்பர் 4 ஆம் தேதி முதல் 16 ம் தேதி வரை 14 வது ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது . 14 வது சீனியர் ஹாக்கி தொடரை காண வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அனுமதி இலவசம் என அறிவித்துள்ளனா்.

சென்னை எழும்பூரில் நவம்பர் 4 ஆம் தேதி முதல் 16 ம் தேதி வரை  14 வது ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது .

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நவம்பர் 4ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை ஹாக்கி இந்தியா தேசிய அளவிலான சீனியர் ஆடவர் 14 வது சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற இருக்கின்றது. நாடு முழுவதும் உள்ள 31 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன 40 சர்வதேச வீரர்கள் 6 ஒலிம்பிக் வீரர்கள் என மொத்தமாக 620 வீரர்கள் இந்த தொடரில் விளையாட இருக்கின்றனர். 45 லீக் போட்டிகள் நடத்தப்பட்டு அதிலிருந்து கால் இறுதி காண அணி தேர்வு செய்யப்படும்.

இந்த போட்டி குறித்தான செய்தியாளர் சந்திப்பு சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அணைக்காக விளையாட உள்ள வீரர்கள் மற்றும் ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டது.
இதில் பேசிய தமிழ்நாடு ஹாக்கி சங்கத் தலைவர் சேகர் மனோகரன்,
தேசிய சீனியர் ஆடவர் சாம்பியன்ஷிப் தொடர்காக தமிழ்நாடு அணி வீரர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி முகாம் மூலம் பயிற்சி கொடுக்கப்பட்டிருப்பதாகவும் 2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணி வீரர்களை தேர்வு செய்வதற்கு இந்த போட்டி மிக முக்கிய போட்டியாக இருக்கும் என்று கூறினார் .

மும்பை டெஸ்ட் போட்டி : வலுவான நிலையில் இந்திய அணி!

தமிழ்நாட்டில் பல்வேறு சர்வதேச ஹாக்கி தொடர்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதை குறிப்பிட்ட அவர் அண்மையில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான ஹாக்கி லீக் தொடர் சிறந்த வரவேற்பை பெற்றது என்றும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இளம் ஹாக்கி வீரர்களுக்கு இந்த தொடர் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான உறுதுணையாக இருக்கும் என்றும் கூறினார் மேலும் தேசிய அளவிலான இந்த சாம்பியன்ஷிப் போட்டியை அனைத்து பள்ளி மாணவர்களும் நேரில் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கான அறிவிப்பு அனைத்து பள்ளிகளுக்கும் பிடி மாஸ்டர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்றும். தொடர்ந்து அடுத்து ஹாக்கி இந்தியாவில் நடத்தப்பட உள்ளதை குறிப்பிட்ட அவர் தமிழ்நாட்டில் ஹாக்கி முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் கூறினார். போட்டிகள் அனைத்தையும் அனைவரும் பார்க்கும் வகையில் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு என்ற பெயரில் யூடியூப் பக்கம் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் இதன் மூலம் அனைவரும் போட்டியை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறினார். வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் துணை முதலமைச்சரும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆன உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசுகளை வழங்க உள்ளார்.

MUST READ