சென்னையில் மேத்தா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் முகமது நவாஷ்(35) அவரது வீட்டடில் வேலை பார்த்து வந்த 16 வயது சிறுமி அடித்து கொலை? வீட்டு உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை போலீஸார் கைது செய்தனா்

சென்னை அமைந்தக்கரை மேத்தா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் முகமது நவாஷ்(35)..இவர் சொந்தமாக பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்கிறாா் . மேலும் இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 6 வயது குழந்தை உள்ளனர். இந்நிலையில் நவாஸ் வீட்டில் கடந்த ஓராண்டாக தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தங்கி வீட்டு வேலை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அதாவது தீபாவளி தினத்தன்று நவாஸ் வீட்டில் வேலை செய்து வந்த சிறுமி வேலைகளை முடித்து விட்டு பாத்ரூமில் குளிக்கச் சென்றதாக சொல்லப்படுகிறது . அப்போது நீண்ட நேரமாகியும் குளிக்க சென்ற சிறுமி வெளியே வராததால் சந்தேகமடைந்த நவாஸ் மற்றும் அவரது மனைவி நிவேதிதா இருவரும் பாத்ரூம் கதவை தட்டியுள்ளனா் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சிறுமி மயங்கிய நிலையில் தரையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனா்..
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தில் நவாஸ் வீட்டை பூட்டி விட்ட மனைவி குழந்தையுடன் உறவினர்கள் வீட்டிற்கு சென்று விட்டதாக சொல்லப்படுகிறது .. பின்னர் நேற்று மாலை வீட்டு உரிமையாளர் முகமது நவாஸ் தனது வழக்கறிஞர் மூலம் சிறுமி இறந்தது குறித்து தகவலை அமைந்தக்கரை காவல் நிலையத்திற்கு தெரிவித்துள்ளார்.. தகவலின் பேரில் போலீஸார் சம்பவயிடத்திற்கு சென்று நவாஸ் மற்றும் அவரது மனைவி நிவேதிதா முன்னிலையில் பாத்ரூமில் இறந்து கிடந்த சிறுமி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா்.
மேலும் சிறுமியின் உடலில் அங்காங்கே காயங்கள் இருபதால் போலீஸாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது .. இதனை அடுத்து போலீஸார் கணவன்-மனைவி இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முகமது நவாஸ் தனது சகோதரியின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது வீட்டிற்கு வேலைக்கு அழைத்துவந்துள்ளாா், சிறுமியின் தந்தை காலமானதால் தாயின் அரவணைப்பில் சிறுமி வளர்ந்து வந்தது தெரியவந்தது. மேலும் குடும்ப சூழ்நிலை காரணமாக சிறுமி தனது தாயை பிரிந்து ஓராண்டாக முகமது நவாஸ் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் சிறுமியை அடித்து துன்புறுத்தியுள்ளனா் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொதுவாக 18 வயதுக்குட்பட்ட சிறார்களை வேலைக்கு பணியமர்த்த கூடாது என சட்ட விதிகள் இருந்தும் நவாஸ் எப்படி 16 வயது சிறுமியை வீட்டின் வேலைக்கு பணி அமர்த்தினார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் . மேலும் சிறுமி பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இறப்பிற்கான உண்மையான காரணம் தெரிய வரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.