spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தலைமை ஆசிரியையின் பன்பற்ற செயல்...பணி நீக்கம் செய்யக்கோரி இருளர் மக்கள் போராட்டம்…

தலைமை ஆசிரியையின் பன்பற்ற செயல்…பணி நீக்கம் செய்யக்கோரி இருளர் மக்கள் போராட்டம்…

-

- Advertisement -

ஸ்ரீபெரும்புதூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பள்ளி தலைமை ஆசிரியை பணி நீக்கம் செய்யக்கோரி இருளர் மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.தலைமை ஆசிரியையின் பன்பற்ற செயல்...பணி நீக்கம் செய்யக்கோரி இருளர் மக்கள் போராட்டம்…காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராகினி சுரேஷ் பாபு தம்பதியினர். இவர்கள் இருளர் இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில் ராகினி சுரேஷ்பாபு தம்பதியினர் ஏரிக்கரை ஓரமாக மிகவும் ஆபத்தான நிலையில் கொட்டகை அமைத்து கடந்த 15 வருடங்களாக குடியிருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் இவர்களுக்கு காட்ரம்பாக்கம் பகுதியில் தென்றல் நகரில் தமிழக அரசு இருளர் குடியிருப்பு அமைத்து வீடு கட்டி கொடுத்துள்ளது இவர்கள் அங்கு குடிபெயர்ந்துள்ளனர்.

we-r-hiring

இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இவர்களது மகள் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். தென்றல் நகரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வருவதற்காக பஸ் வசதி இல்லாததால் ஸ்ரீபெரும்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தனது மகளின் மாற்றுச் சான்றிதழை வாங்கி காட்ரம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் சேர்ப்பதற்காக ஸ்ரீபெரும்புதூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் மாற்று சான்றிதழ் கேட்டுள்ளனர்.

அப்பொழுது அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை டீசி தராமல் ராகினியை  இன்று வா நாளை வா என மூன்று நாட்களுக்கு மேலாக அலைகழித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ராகினி தனது மகளின் மாற்றுச் சான்றிதழை வாங்குவதற்காக ஸ்ரீபெரும்புதூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றுள்ளார். அப்பொழுது தலைமை ஆசிரியை ராகினியை பார்த்து உன்னை பார்ப்பதற்கு அருவருப்பாய் இருக்கிறது வாந்தி வருது நீ இங்கிருந்து போய்விடு என ஒருமையில் பேசி உள்ளார்.

இதனால் ராகினி மன உளைச்சலுக்கு உள்ளானார். தற்போது இது சம்பந்தமாக இருளர்கள் சுமார் 40க்கு மேற்பட்டோர் ஸ்ரீபெரும்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் நுழைவாயில் அருகே தலைமை ஆசிரியை பணிநீக்கம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் தற்போது ஸ்ரீபெரும்புதூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பரபரப்பு நிலவி வருகிறது.

நயினார் நாகேந்திரன் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த முயற்சி – திருமாளவளவன் குற்றசாட்டு

MUST READ