Homeசெய்திகள்திமுகவினரை அவதூறாக பேசியவர்கள் :நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல்:

திமுகவினரை அவதூறாக பேசியவர்கள் :நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல்:

-

திமுக தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு:

தமிழக முதலமைச்சரையும் அமைச்சர்,உதயநிதி ,கனிமொழி ஆகியோரை அவதூறாக பேசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் புகார்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, நாடாளுமன்ற உறுப்பினரும் கழக துணை போது செயலாளர் கனிமொழி, ஆகியோர் மீது அதிமுக மாநாட்டில் அநாகரிகமான முறையில் அவதூறாக பேசியும் பாட்டு படித்ததை கைத்தட்டி கேலி செய்தவர்களை கண்டித்தும், செய்தியை நேரடியாக ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சியின் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க கோரி தென்காசி மாவட்ட கண்காணிப்பாளர் சாம்சனிடம், தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஜெயபாலன் தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது.

திமுக தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு:

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, துணை செயலாளர் கென்னடி,பொதுக்குழு உறுப்பினர் தென்காசி யூனியன் சேர்மன் ஷேக் அப்துல்லா, துணை சேர்மன் கனகராஜ் முத்துப்பாண்டியன், தென்காசி நகர மன்ற தலைவர் சாதீர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா, மகளிர் அணியை சேர்ந்த சங்கீதா, பேபி, ரெஜாபாத்திமா, சாலிமேரி, தர்ம செல்வி, சம்பவர் வடகரை மாறன், மற்றும் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

MUST READ