spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்வானிலைஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு உருவானது ... தமிழகத்தை மீண்டும் மிரட்டும் கனமழை

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு உருவானது … தமிழகத்தை மீண்டும் மிரட்டும் கனமழை

-

- Advertisement -

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு உருவானது ... தமிழகத்தை மீண்டும் மிரட்டும் கனமழை

வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி  ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறுவதில் தொடர்ந்து தாமதம் நீடிக்கிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்தது.

we-r-hiring

தற்போது வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறி இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. கடந்த 24 மணி நேரமாக, இந்த தாழ்வுப் பகுதி ஒரே இடத்தில் நகராமல் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறி இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி நகரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு பகுதியில் தமிழகம், இலங்கை நோக்கி நகர்கிறது. அதன் காரணமாக டெல்டா மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 13 கார்த்திகை தீபத் திருவிழா – பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை

MUST READ