வங்கக்கடலில் டானா (DANA) புயல் உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் ஒரிசா, மேற்கு வங்கம் மாநிலத்திற்கு ரெட் அலார்ட் விடுப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு கத்தார் நாட்டின் பரிந்துரையின்படி DANA என பெயரிடப்பட்டுள்ளது. நடப்பாண்டின் 3வது புயலாகவும், வடகிழக்கு பருவமழை கால முதலாவது புயலாகவும் உருவாகியுள்ளது டானா.
டானா புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுப்பெற கூடும் எனவும் 25ஆம் தேதி அதிகாலை பூரிக்கும் – சாகர் தீவுகளுக்கும் இடையே டானா தீவிர புயலாக கரையை கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் கடக்கும் சமயத்தில் மணிக்கு 100 முதல் 110 கிமீ வேகத்திலும் இடையிடையே 120 கிமீ வேகத்திலும் சூறைக்காற்று வீசக்கூடும்
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் 21ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது.
இந்த புயல் ஒடிசா, மேற்கு வங்கத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் 24, 25 ஆகிய இரண்டு தேதிகளில் அங்கே ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.