தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், ஈரோடு, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், தென்காசி, நெல்லை ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையில் 2 நாட்கள் நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தமிழ் நாட்டில் இன்று நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், தேனி, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, தருமபுரி, விழுப்புரம், உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ் மொழியை ஒன்றிய அரசு வஞ்சிப்பது ஒன்றும் புதிது இல்லை – கி.வீரமணி குற்றச்சாட்டு



