தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேலும், தமிழகத்தின் சில கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை அதானி துறைமுகத்தில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கண்டெய்னா்கள் மாயம்…


