spot_imgspot_img
Homeசெய்திகள்வானிலைதமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 9 இடங்களில் கனமழை!

தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 9 இடங்களில் கனமழை!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 9 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது.தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 9 இடங்களில் கனமழை!தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் கோவை சின்னக் கல்லாற்றில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கோவை சோலையாற்றில் 10 செ.மீ மழையும், சின்கோனரில் 10 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வால் பாறையில் 8 செ.மீ மழையும், கடலூா், லால் பேட்டை, மற்றும் கொள்ளிடத்தில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீா் வரத்து அதிகரிப்பால் நீா் திறக்கப்பட்டதால், கம்பம் முல்லை பெரியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ் நாட்டிற்கு 1,844 கன அடி நீா் திறக்கப்படுகிறது. முல்லை பெரியாற்றில் மக்கள் இறங்கவும், குளிக்கவும் வேண்டாம் என மாவட்ட நிா்வாகம் வலியுறுத்தியுள்ளது.

இரண்டாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் பலி…

we-r-hiring

MUST READ