நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர்.
நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிவபுரி பகுதியில் ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேரும், ஹெலிகாப்டர் விமானியும் உயிரிழந்தனர்.
விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து போலீசார் சடலங்களை மீட்டுள்ளனர். இருப்பினும், ஒரு உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துள்ளது.
காத்மாண்டுவில் இருந்து பிற்பகல் 1:54 மணிக்கு புறப்பட்ட ஏர் டைனஸ்டி ஹெலிகாப்டர், காத்மாண்டுவில் இருந்து சியாபுருபென்ஸி நோக்கி சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த நிலையில், நுவாகோட் என்ற பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.
இந்த கோர சம்பவத்தில் விமானி உள்பட அதில் பயணம் செய்த 5 பேர் பலியாகினர். சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.