spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்- 1300க்கும் மேற்பட்டோர் பலி

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்- 1300க்கும் மேற்பட்டோர் பலி

-

- Advertisement -

துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Powerful Earthquake Kills Hundreds in Turkey and Syria - The New York Times

we-r-hiring

தென்கிழக்கு துருக்கியில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.45 மணிக்கு 8.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக எகினோசு நகரத்தை மையமாக கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுவருவதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மீட்பு படையினர் இடிபாடுகளை அகற்றிவரும் நிலையில் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணிநேரத்துக்குள் இரண்டாவது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 912-ஐ தாண்டியது. சிரியாவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 467-ஐ தாண்டியது.

சிரியா மற்றும் துருக்கியில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். சிரியா நாட்டு மக்களின் துயரத்தில் பங்கேற்று இந்த துயரமான தருணத்தில் அவர்களுக்கு உதவியும், ஆதரவையும் அளிக்க நாங்கள் உறுதிப்பூண்டுள்ளோம் என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நிலநடுக்கத்தால் சிரியாவும் பாதிக்கப்பட்டது என்பது மிகவும் கவலையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். சிரியா நாட்டு மக்களின் துயரத்தில் பங்கேற்று இந்த துயரமான தருணத்தில் அவர்களுக்கு உதவியும், ஆதரவையும் அளிக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Home

நில நடுக்கத்தை அடுத்து துருக்கி முழுவதும் கடல் சீற்றமாக உள்ளது. துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தில் 1,700க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், 2,000 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இடிபாடுகளில் இருந்து 10 நிமிடங்களுக்கு ஒருமுறை சடலங்கள் மீட்கப்பட்டுவருவதாக சிரியா அரசு தெரிவித்துள்ளது. மீட்பு பணிகளில் உதவ உலக நாடுகளிடம் துருக்கி அரசு கோரிக்கை வைத்ததை அடுத்து, இந்தியாவிலிருந்து மீட்புப்பணிகளுக்காக வீரர்கள் துருக்கி சென்றுள்ளனர்.

MUST READ