- Advertisement -
இலங்கையின் 9-வது அதிபராக அநுரா குமார திசாநாயக்க பதவியேற்றார்.
நேற்று வெளியான அதிபர் தேர்தல் முடிவுகளில் சுமார் 42.31 சதவீத வாக்குகளை பெற்று அவர் வெற்றி பெற்றார். “தேர்தலில் எனக்கு வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையை பெறுகின்ற வகையில் நான் பணியாற்றுவேன். எனக்கு முன் உள்ள சவால் மற்றும் சிக்கல்களைஅறிந்து, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பணியாற்றுவேன்” என பதவியேற்றுக் கொண்டதும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி அநுரா குமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதற்கு அவர் நன்றி தெரிவித்து ‘இரு நாடுகளின் நலனுக்காக இணைந்து பணியாற்றலாம்’ என்றும் தெரிவித்துள்ளார்.