spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் போரிஸ் ஜான்சன்!

எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் போரிஸ் ஜான்சன்!

-

- Advertisement -

 

எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் போரிஸ் ஜான்சன்!
Twitter Image

பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

we-r-hiring

கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

பிரிட்டன் பிரதமராக இருந்த போது, தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் கொரோனா விதிகளை மீறி நடைபெற்ற விருந்து நிகழ்ச்சிகள் குறித்து நாடாளுமன்றத்தின் பொது அவைக்கு தவறான தகவல் கொடுத்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த விவகாரத்தை விசாரிக்கும் நாடாளுமன்றக் குழு போரிஸ் ஜான்சனுக்கு கடிதம் எழுதியதாகத் தெரிகிறது.

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி- வலுவான நிலையில் ஆஸ்திரேலியா அணி!

இந்த நிலையில், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பிறகு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தம்மை நாடாளுமன்றத்தை விட்டு விரட்ட சதி நடப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். பொது அவைக்கு தாம் தவறான தகவல் அளித்ததற்காக, எந்த ஆதாரத்தையும் அவர்கள் இதுவரை காட்டவில்லை எனவும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

MUST READ