- Advertisement -
கிழக்கு ஆப்ரிக்க நாட்டை புரட்டிப்போட்ட புயல் மழை
கிழக்கு ஆப்ரிக்க நாடான மாலவியில் (Malawi) புயல் மழையில் சிக்கி 100பேர் உயிரிழந்து உள்ளனர்.
மழையில் சிக்கி 100 பேர் உயிரிழந்ததாக தகவல்
மாலவி நாட்டில் ஃபிரெட்டி புயல் கோரத் தாண்டவமாடி வருகிறது. சூறாவளிக் காற்றுடன் விட்டு விட்டு கனமழையும் தொடர்வதால் மின்கம்பங்கள் சாய்ந்து எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குறிப்பாக பிளான்டைர் (Blantyre) பகுதியில் வீட்டுக்குள் புகுந்த மழைநீரை மக்கள் பெரும் சிரமத்துடன் வெளியேற்றினர்.

சேதமடைந்த வீடுகளை பார்வையிடும் மக்கள்
மழை சற்று ஓய்ந்ததால், நிவாரண முகாம்களிலிருந்து வீடுகளுக்கு திரும்பிய மக்கள், சேதமடைந்த வீடுகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாலவியில் ஏற்கனவே காலரா நோய் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், தொடர் மழையும் பாதிப்பு எண்ணிக்கையை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.