Homeசெய்திகள்உலகம்சிங்கப்பூர் நாட்டின் அதிபராக தமிழர் தர்மன் சண்முகரத்னம் தேர்வு!

சிங்கப்பூர் நாட்டின் அதிபராக தமிழர் தர்மன் சண்முகரத்னம் தேர்வு!

-

- Advertisement -

 

சிங்கப்பூர் நாட்டின் அதிபராக தமிழர் தர்மன் சண்முகரத்னம் தேர்வு!
File Photo

சிங்கப்பூர் அதிபர் தேர்தல் வெற்றி பெற்ற இலங்கை தமிழரான தர்மன் சண்முகரத்னம், அந்நாட்டின் ஒன்பதாவது அதிபராகப் பதவியேற்க உள்ளார்.

யூபிஐ மூலம் பரிவர்த்தனை எண்ணிக்கையில் ஆயிரம் கோடியைத் தாண்டியது!

சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நேற்று (செப்டம்பர் 01) காலை 08.00 மணிக்கு தொடங்கி இரவு 08.00 மணி வரை நடைபெற்றது. அதிபர் தேர்தலில் சிங்கப்பூரின் முன்னாள் துணை பிரதமரும், முன்னாள் மூத்த அமைச்சரும், இலங்கை தமிழருமான தர்மன் சண்முகரத்னம், இங் கொக் சொங், டான் கின் லியான் ஆகியோர் களத்தில் இருந்தனர்.

வாக்கு எண்ணிக்கை நேற்று இரவு 08.00 மணிக்கு தொடங்கிய நிலையில், தேர்தல் முடிவுகளை அந்நாட்டு தேர்தல் துறை நள்ளிரவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் சுமார் 70.40% வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டான் கின் லியான் 13.88% வாக்குகளும், இங் கொக் சொங் 15.72% வாக்குகளும் பெற்று படுதோல்வி அடைந்தனர். சிங்கப்பூர் நாட்டின் அதிபராகப் பதவியேற்க உள்ள தர்மன் சண்முகரத்னத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த இந்தியா கூட்டணி!

சிங்கப்பூர் அதிபராகும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்றாவது நபர் என்ற பெருமையை தர்மன் சண்முகரத்னம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ