இஸ்ரேல் நகரில் துப்பாக்கிச்சூடு
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவின் மையப் பகுதியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
நகரின் மையப்பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு
டெல் அவிவ் நகரின் மையப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். இதில் மூன்று பேர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்றுவருகிறார்.
பயங்கரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என சந்தேகம்
தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீஸார், தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கும் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். எனவே, தாக்குதல் நடத்திய நபர் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.