spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்எகிப்தில் அல்-ஹக்கிம் பள்ளிவாசல் மீண்டும் திறப்பு

எகிப்தில் அல்-ஹக்கிம் பள்ளிவாசல் மீண்டும் திறப்பு

-

- Advertisement -

எகிப்தில் அல்-ஹக்கிம் பள்ளிவாசல் மீண்டும் திறப்பு

எகிப்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அல்-ஹக்கிம் பள்ளிவாசல் புனரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கெய்ரோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல்

எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அல்-ஹக்கிம் பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்த பள்ளிவாசலில் 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த புனரமைப்பு பணிகள் நிறைவு அடைந்தது. இதையொட்டி, பள்ளிவாசல் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது.

we-r-hiring

கெய்ரோவில் உள்ள இரண்டாவது பெரிய பள்ளிவாசல்

தலைநகர் கெய்ரோவில் உள்ள இரண்டாவது பெரிய அல்-ஹக்கிம் பள்ளிவாசல், கி.பி. 990-ல் சுமார் 14 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டது.

இந்திய மதிப்பில் சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு

88 மில்லியன் எகிப்தியன் பவுண்ட் பட்ஜெட்டில், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிவாசல் புனரமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு இந்த பணிகள் தொடங்கிய நிலையில், இந்த பிரமாண்ட பள்ளி வாசல் மீண்டும் தற்போது வழிபாட்டிற்காக திறக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், புதுப்பிக்கப்பட்டுள்ள பள்ளிவாசலை காண இஸ்லாமியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

MUST READ