Homeசெய்திகள்உலகம்கிரீஸில் ரயில்கள் மோதி விபத்து; 26 பேர் பலி

கிரீஸில் ரயில்கள் மோதி விபத்து; 26 பேர் பலி

-

- Advertisement -

கிரீஸில் ரயில்கள் மோதி விபத்து; 26 பேர் பலி

கிரீஸ் நாட்டில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 26 பேர் மரணம் அடைந்தனர்.

பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் மோதி விபத்து

கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு 350-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரயில் சென்று கொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி என்ற இடத்தில் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தபோது, அதே தண்டவாளத்தில் எதிரே அதிவேகத்தில் வந்த சரக்கு ரயில் மோதியது. இதில் இரண்டு ரயில்களும் பயங்கர விபத்துக்குள்ளாகின.

தீப்பிடித்து எரிந்த ரயில் பெட்டிகள்

ரயில்கள் மோதிய வேகத்தில், பயணிகள் ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து விலகி, கீழே கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தன. இந்த பயங்கர விபத்தில் 26 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

மீட்பு பணிகள் தீவிரம்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

MUST READ