spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்உலகின் மிகப்பெரிய ஐபோனை உருவாக்கி கின்னஸ் சாதனை!

உலகின் மிகப்பெரிய ஐபோனை உருவாக்கி கின்னஸ் சாதனை!

-

- Advertisement -

உலகின் மிகப்பெரிய ஐபோனை உருவாக்கி இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டிஷ் யூடியூபர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்

இங்கிலாந்தைச் சேர்ந்த அருண்  மைனி,  “MrWhoseTheBoss” என்ற டெக் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவரது சேனலை 19.4 மில்லியன் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இந்த நிலையில், அருண் மைனி சாதனை முயற்சியாக சுமார் 6.74 அடி உயரத்தில் IPHONE 15 PRO MAX-ன் மாதிரியை வடிவமைத்துள்ளார். மேத்யூ பெர்க்ஸ் என்ற தனது நண்பருடன் இணைந்து இந்த ஐபோனை வடிவடைத்துள்ளார்.

we-r-hiring

88 இன்ச் ஒல்இடி டிவி, டெக்ஸ்ட் மற்றும் இமெயில் அனுப்பும் வசதி, பிளாஷ் லைட் என பல்வேறு வசதிகள் இந்த ஐபோனில் இடம்பெற்றுள்ளன. சுமார் ஓராண்டு முயற்சியில் இந்த செல்போன் உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு ரூ.59 லட்சம் வரை செலவானதாக  அருண் மைனி கூறியுள்ளார். இவர்களது பிரம்மாண்ட ஐபோனை பார்வையிட்ட கின்னஸ் உலக சாதனை அமைப்பினர் உலகின் மிகப்பெரிய ஐபோன் என்ற சான்றிழ் வழங்கியுள்ளனர்.

இதுவரை செய்யாத ஒன்றை செய்ததற்காக தனது குழுவினர் மற்றும் மேட் பெர்க்ஸ் ஐ நினைத்து பெருமைப்படுவதாகவும்,  சிறு வயதில் கின்னஸ் புத்தகங்களில் தன்னை இழந்த நிலையில், தற்போது சாதனை ஒன்றை தான் வைத்திருப்பது முற்றிலும் சர்ரியலாக உணர்வதாக அருண்  மைனி தெரிவித்துள்ளார்.

MUST READ