spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரியா பதவி ஏற்பு... நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் திசநாயகே உத்தரவு

இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரியா பதவி ஏற்பு… நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் திசநாயகே உத்தரவு

-

- Advertisement -

இலங்கையின் இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூரியா நேற்று பொறுப்பேற்ற நிலையில், அந்நாட்டின் நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் திசநாயகே உத்தரவிட்டுள்ளார்.

we-r-hiring

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவரும், இடதுசாரி தலைவருமான அனுரகுமார திசநாயகே வெற்றி பெற்று நாட்டின் 9வது அதிபராக பதவி ஏற்றுகொண்டார். புதிய அதிபர் தலைமையில் புதிய அரசு அமைவதற்கு வசதியாக அந்நாட்டு பிரதமர் தினேஷ் குணவர்தனே தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவி விலகியது.

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், சமுக செயற்பாட்டாளருமான ஹரிணி அமரசூரியாவை நாட்டின் இடைக்கால பிரதமராக நியமித்து, அதிபர் அனுரகுமார திசநாயகே உத்தரவிட்டார். இதனை அடுத்து, ஹரிணி அமரசூரியா இலங்கையின் 3வது பெண் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். திசநாயகே தலைமையிலான 4 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவையும் நேற்று பதவியேற்றது. அமைச்சர்களாக விஜிதா ஹெராத், லக்ஷ்மண் நிபுணராச்சி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, நேற்று மாலை இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து, அதிபர் அனுரகுமார திசநாயகே உத்தரவிட்டார். இலங்கை நாடாளுமன்றத்துக்கு வரும்  நவம்பர் 14ல் பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும், அதற்கான வேட்புமனு தாக்கல் வரும் அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

MUST READ