spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் தாக்கப்பட்டதா? - வெளியான அதிர்ச்சி தகவல்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் தாக்கப்பட்டதா? – வெளியான அதிர்ச்சி தகவல்

-

- Advertisement -

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது உயிரிழப்பில் பல்வேறு மர்மங்கள் உள்ளது தெரியவந்துள்ளது.

we-r-hiring

அண்டை நாடான அஜர்பைஜானில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி நாடு திரும்பும் வழியில் கடும் பனிமூட்டம் காரணமாக அவர் பயணித்த ஹெலிகாப்டர் மலை முகடுகளுக்கு நடுவே சிக்கி நொறுங்கி விபத்திற்கு உள்ளானதாக கூறப்பட்டது. ஹெலிகாப்டர் முழுவதும் தீப்பிடித்து எரிந்த நிலையில் கிடந்தது. விபத்திற்கு உள்ளான ஹெலிகாப்டரில் அதிபருடன் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட 8 பேர் பயணித்து உள்ளனர். அவர்கள் 9 பேரும் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் ஈரான் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் உலக நாடுகளின் தலைவர்களையும் இது அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

ஏற்கனவே இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வந்த நிலையில் ஈரான் அதிபர் விபத்தில் இறந்திருப்பது பதற்றத்தை இன்னும் அதிகரித்துள்ளது. ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டருடன் மேலும் இரண்டு ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பிற்காக சென்றன. மூன்று ஹெலிகாப்டர்களும் ஒரே பாதையில் பயணித்த நிலையில், ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் மட்டும் விபத்துக்குள்ளானது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் தாக்கப்பட்டிருக்கலாம் என உலக நாடுகள் சந்தேகிக்கின்றன. இந்த சம்பவத்தில் இஸ்ரேல் அல்லது அமெரிக்காவின் உளவு அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் பரவலாக கூறப்படுகிறது.

MUST READ