தற்காலிக போர்நிறுத்தத்திற்கு “ஈடாக ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறக்கப் போவதில்லை என்று ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் திங்களன்று (ஏப்ரல் 6, 2026) ராய்ட்டர்ஸ் செய்திய நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
ஒரு நிரந்தர போர்நிறுத்தத்திற்கு வாஷிங்டன் தயாராக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உடனடி போர்நிறுத்தத்திற்கான பாகிஸ்தானின் ஆலோசனையை ஈரான் பெற்றுள்ளதாகவும், அது தற்போது பரிசீலனையில் இருப்பதாகவும் உறுதிப்படுத்திய அவர், காலக்கெடுவை நிர்ணயித்து முடிவெடுக்கக் கோரி ஈரான் மீது அழுத்தம் கொடுக்கப்படுவதை ஏற்க முடியாது என்றும் கூறினார்.
இஸ்ரேலிய இராணுவம் திங்களன்று (ஏப்ரல் 6, 2026) தெஹ்ரானில் உள்ள “ஆட்சி இலக்குகளுக்கு” (regime targets) எதிராக ஒரு தொடர் தாக்குதல்களை நடத்தி முடித்துள்ளதாகவும், இதில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணையை ஈரான் உடனடியாக திறக்க வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எதிரிகள் ஈரானின் பொதுமக்களை, தாக்கினால், அதற்கு “மிகவும் அழிவுகரமான” பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானின் மத்திய இராணுவத் தலைமை திங்களன்று எச்சரித்துள்ளது.
ஈரானிய கலாச்சார அமைச்சர் சயீத் ரெசா சாலிஹி-அமிரி, அதிபர் டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தல்களை நிராகரித்ததுடன், அமெரிக்கத் தலைவரை “நிலையற்ற, மாயத்தோற்றத்தில் வாழும் ஒரு நபர்” (unstable, delusional figure) என்று விமர்சித்துள்ளார்.
ஈரான் அண்டை வளைகுடா நாடுகளில் உள்ள உள்கட்டமைப்பு இலக்குகளைத் தாக்கியுள்ளது. மேலும், மீட்புப் பணி குறித்த அமெரிக்காவின் விளக்கத்தை சவாலுக்கு உட்படுத்தியதுடன், பிராந்தியத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் மற்றொரு நீர்வழியான பாப் எல்-மண்டேப் (Bab el-Mandeb) நீரிணையையும் கட்டுப்படுத்துவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
”அடிமை நாடாக இருக்க விரும்பலில்லை”- பிரான்ஸ் அதிபரின் அதிரடி பேச்சு…
