Homeசெய்திகள்உலகம்இஸ்ரேல் தலைநகரில் பெண்கள் போராட்டம்

இஸ்ரேல் தலைநகரில் பெண்கள் போராட்டம்

-

இஸ்ரேல் தலைநகரில் பெண்கள் போராட்டம்

நீதித்துறை மறுசீரமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் தலைநகரில் ஆயிரக்கணக்கான பெண்கள் சிவப்பு நிற உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்ரேலில் நீதித்துறையை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர, அதிபர் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சர்வதேச பெண்கள் தினமான நேற்று, ஆயிரக்கணக்கான பெண்கள் சிவப்பு உடை அணிந்து டெல் அவிவ் நகரில் பேரணியில் ஈடுபட்டனர்.

திட்டத்தை இஸ்ரேல் அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும் என பேரணியில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர். இதில் எந்த சமரசமும் இல்லை என்றும் அவர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

சர்வதேச மகளிர் தினம் தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் நாள் என்றாலும் கூட, உரிமைக்காக போராட வேண்டியது அவசியம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

MUST READ