spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்"மேக் இன் இந்தியா திட்டம்" ரஷ்ய அதிபர்  பாராட்டு !

“மேக் இன் இந்தியா திட்டம்” ரஷ்ய அதிபர்  பாராட்டு !

-

- Advertisement -

"மேக் இன் இந்தியா திட்டம்" ரஷ்ய அதிபர்  பாராட்டு !

சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட மேக் இன் இந்தியா திட்டத்தை ரஷ்ய அதிபர் புடின் பாராட்டியுள்ளார்.

மாஸ்கோவில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில், ரஷ்ய அதிபர் புடின் பேசியது, “இந்தியாவில் எம் எஸ் எம் ஈ-க்கு (MSME) முன்னுரிமை அளிப்பதில் கவனம் செலுத்துகிறோம். எங்கள் உற்பத்தித்தளத்தை இந்தியாவில் நிறுவ தயாராக இருக்கிறோம். இந்திய பிரதமரும், இந்திய அரசும், அதற்கான சூழ்நிலையை உருவாக்கி வருகின்றனர்.

we-r-hiring

இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது என்று நாங்கள் நம்புகிறோம். ரஷ்யாவில் விவசாயம் உட்பட அனைத்து துறைகளிலும் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு வாய்ப்புகளை விரிவு படுத்துவதற்கான தேவை இருக்கிறது.
கடந்த ஆண்டு நாங்கள் 66 பில்லியன் டாலர் அளவுக்கு தானியங்களை ஏற்றுமதி செய்தோம். பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா திட்டம்’ பாராட்டக் கூடியது”. என அவர் பேசி உள்ளார்.

MUST READ