வடகொரியா அதிபரின் அதிரடி அறிவிப்பு
வெளிநாட்டு படங்கள் மற்றும் வெப் தொடர்களை பார்க்கும் குழந்தைகளுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என வட கொரிய அரசு அதிரடி அறிவிப்பை வௌியிட்டுள்ளது.
கிம் ஜாங் உன் அதிபராக இருக்கும் வட கொரியா நாட்டில் இணையதளம், சமூக வலைதளம் உள்ளிட்டவை கிடையாது. குறிப்பிட்ட டிவி சேனல்களை மட்டும் அதிக கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பார்க்க அரசு அனுமதி அனுமதித்துள்ளது. மேலு, சினிமா இணைய தொடர்களையும், சிடிக்களை பார்ப்பதற்கும், விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதோடு மட்டுமன்றி, இதை கண்காணிக்க பிரத்யேகமாக தனி குழு அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு சட்டவிரோதமாக தென் கொரிய இணைய தொடர்களை பார்த்த இரண்டு சிறுவர்கள் தூக்கில் போடப்பட்ட சம்பவம் உலகை உலுக்கியது.
இந்நிலையில், தடையை மீறி வெளிநாட்டு படங்கள் மற்றும் தொடர்கள் பார்க்கும் குழந்தைகளுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என வட கொரியா அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், குழந்தைகளின் பெற்றோர் 6 மாத காலம் தொழிலாளர் முகாமில் வேலை பார்க்க வேண்டும் என்றும், கிம் ஜாங் உன் அரசு அறிவித்துள்ளது.