spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்வடகொரியாவில் உணவு பற்றாக்குறை

வடகொரியாவில் உணவு பற்றாக்குறை

-

- Advertisement -

வடகொரியாவில் உணவு பற்றாக்குறை

வடகொரியாவில் கடும் உணவு பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

 

we-r-hiring
உணவு பற்றாக்குறையால் தவிக்கும் வடகொரியா மக்கள்

வடகொரிய நாட்டில் கடும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டு மக்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். கொரோனா தொற்று காரணமாக வடகொரியாவுக்கு அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உணவு உற்பத்தி 20 சதவீதம் குறைந்துள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். ஏவுகணை சோதனைகளால் சர்வதேச அளவில் பொருளாதார தடை விதிக்கப்பட்டு உள்ளதால் இந்த நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

உயர்மட்ட குழுவை கூட்டி ஆலோசித்த கிம் ஜாங் உன்

இதையடுத்து உணவு பற்றாக்குறையை போக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் ஆளும் தொழிலாளர் கட்சியின் உயர்மட்ட குழுவை கூட்டினார். இதில் உணவு உற்பத்தியை அதிகரிப்பது குறித்தும், விவசாய முன்னேற்றம் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. விவசாயம் குறித்து விவாதிக்க மட்டுமே கட்சியின் கூட்டம் கூட்டப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

MUST READ