சூடானில் ராணுவம் துணை – ராணுவம் மோதல் உச்சம்
சூடானில் உள்நாட்டு போரில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதி இல்லாமல் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
வட ஆப்பிரிக்கா நாடான சூடானில் ஆட்சியை கைப்பற்றுவதில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்திற்கும் இடையான மோதல் ஆறாவது நாளாக நீடித்து வருகிறது.
தலைநகர் கார்ட்டூனில் வான்வழி தாக்குதலும் குண்டு வீச்சி சத்தமும் தொடர்ந்து கேட்டபடி உள்ளது.
இறுதி அதிகாரம் யாருக்கு என்பன உள்ளிட்ட விஷயங்களில் கருத்து ஒற்றுமை ஏற்படாததால் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. மேலும் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தமும் முடிவிற்கு வந்ததால் மீண்டும் சண்டை மூண்டு உள்ளது.
மோதலில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாமல் அவர்கள் உயிரிழந்து வருகின்றனர்.
உயிருக்கு அஞ்சி மருத்துவமனைக்கு செல்ல ஊழியர்கள் தயக்கம் காட்டுகின்றன.
எனவே இப்பிரச்சனையில் உலக நாடுகள் தலையிட்டு அமைதி ஏற்பட உதவி செய்ய வேண்டும் என்று சூடான் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.